இந்தியாவில் தடை எதிரொலி.. கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு கடும் சரிவு : பிட்காயின் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு பல கோடி நஷ்டம்!!

Estimated read time 1 min read

புதுடெல்லி:

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ள நிலையில் இதன் எதிரொலியாக முக்கிய கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை வரும் 29ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இத்தொடரில் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவற்றுள் கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 – வும் ஒன்றாகும். இந்த மசோதா மூலம் நாட்டில் புற்றீசல் போல் பெருகி, நாட்டின் பொருளாதாரத்துக்கு சவாலாக விளங்கி வரும் தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, சில முக்கியமான கிரிப்டோகரன்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இதன் எதிரொலியாக முக்கிய கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது.கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் வாஸிர்எக்ஸ் தரவுகளின்படி டிஜிட்டல் நாணயச் சந்தை தற்போது சரிவு கண்டுள்ளது. பிட்காயின், எத்ரம், சோலனா, பினான்ஸ் உள்ளிட்ட முக்கிய கிரிப்ட்டோ கரன்சிகள் அனைத்தின் விலையும் சரிவு கண்டுள்ளது. எத்ரம் 0.86 சதவீதம் சரிந்து 4,167 டாலராக வர்த்தகம் செய்கிறது. சோலனாவும் 1.24 சதவீதம் சரிந்து 4,167 டாலராக வர்த்தகமானது.மீமீகாயின் என அழைக்கப்படும் டோகே மற்றும் ஷிபா ஈனு அவற்றின் மதிப்புகளும் உயரவில்லை. அவற்றின் வளர்ச்சி முறையே 0.30 சதவிகிதம் மற்றும் 1.64 சதவிகிதமாக மட்டுமே உள்ளது….

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours