📚📖📚📖📚📖📚📖

🌺 *சமூகப்பற்றாளன் ஞானசித்தனின்*

✍ *தினமொரு பயனுள்ள தகவல்*

நாள் :~ 02 .11 . 21

🌷இவ்வுலக வழக்கத்தில்
ஏறத்தாழ மூவாயிரம் மொழிகளுக்கு மேலுண்டு…

🌷அவற்றுள் வேறு எந்த மொழிக்குமே இல்லாத சிறப்பு நம் தமிழ் மொழிக்குண்டு…

🌷செம்மொழிக்கு தேவையான சிறப்பு பண்புகளான…

1)தொன்மை, 2)முன்மை, 3)எளிமை, 4)ஒண்மை, 5)இளமை, 6)வளமை, 7)தாய்மை, 8)தூய்மை, 9)செம்மை, 10)மும்மை, 11)இனிமை, 12)தனிமை, 13)பெருமை, 14)திருமை, 15)இயன்மை, 16)வியன்மை,

போன்ற அனைத்து சிறப்புகளும் நம் தமிழ் மொழிக்குண்டு என்றார்…

– ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள்….

🌷உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர்.

🌷பொருளிலக் கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழியாக அறியலாம்.

🌷மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது நம் தமிழ் மொழி…

🌷அக்கால மக்கள் வீர தீர வாழ்க்கையையும், கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும்
எட்டுத் தொகையுமாகும்.

🌷பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் உலகப்பொது மறையான “திருக்குறள்” போல் வேறு மொழிகளில் அறநூல் இல்லை…

🌷மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவாரம் & திருவாசகம் தமிழில் இலக்கியத்தில் வைரமாக ஒளிர்கின்றன.

🌷உலக வரலாறோடு தொடர்புடைய மொழி
நம் தமிழ்மொழி….
வேறு மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன.

🌷இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

இப்படி நம் தமிழ் மொழியின் அருமையைப் பற்றி,
பெருமையைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி,
புகழைப் பற்றி…
சொல்லிக் கொண்டே போகலாம்….

🌷பாட்டுக்கொரு புலவனான மகாகவி பாரதியார்,

மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்,

விடுதலை வீரர்களான
பகத் சிங், கொடிகாத்த குமரன்,

கணிதமேதை இராமானுஜம்…

வீரத்துறவி விவேகானந்தர்…

திரைப்பட பாடலாசிரியர்
நா.முத்துக்குமார்,
அண்ணாமலை,

அன்மையில் மறைந்த நவீன காலத்து வள்ளல் கன்னட நடிகர் திரு.புனித் ராஜ்குமார்.

தனித்தமிழ் இயக்கத்தின் தூணாக விளங்கிய பரிதிமாற் கலைஞர் ….

மேற்கூறிய அனைத்து சாதனையாளர்களுக்குமே ஒரு ஒற்றுமையுண்டு….

அது என்னவென்றால்…

அவர்கள் அனைவருமே அந்தந்தத் துறையில்…

மிக இளம் வயதிலேயே
சாதித்து சரித்திரம் படைத்து
அகால மரணம் அடைந்தவர்கள்….

🌷 *நவம்பர் ~ 02 ஆகிய இன்று நற்றமிழ் நாவலர்* *தமிழின காவலர் என போற்றப்படும் பரிதிமாற் கலைஞர் எனப்படும் தமிழறிஞரின் நினைவு தினமாகும்*

*இன்றைய பயனுள்ள தகவலாக பரிதிமாற் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு*

👇👇👇👇👇

🌷 பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் மிகச்சிறந்த தமிழறிஞர், நூலாசிரியர், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.

🌷இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை அதிகம் கொண்டவர்..

🌷 ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.

🌷 *பிறப்பு*

வி. கோ.
சூரியநாராயண சாத்திரி அவர்ள் ஆகஸ்டு~ 6 ~ம் தேதி~ 1870 ~ ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள
விளாச்சேரி எனும் சிற்றூரில் பிறந்தார்…

பெற்றோர் கோவிந்த
சிவன், லட்சுமி அம்மாள்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரி என்று அழைக்கப்பட்ட இவர், *தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்*

🌷 *வாழ்க்கைக் குறிப்பு*

இவர் வடமொழியை தந்தையாரிடமும் , தமிழை மதுரை சபாபதி என்ற தமிழறிஞரிடம் கற்றார் .

🌷இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும்,இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்..

🌷பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார்.

🌷தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.

🌷கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் .

🌷இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார்.

🌷இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார்.

🌺 *இவரது நூல்கள்*

1)ரூபவதி
2)கலாவதி
3)மான விஜயம்
4)தனிப்பாசுரத் தொகை
5)பாவலர் விருந்து
6)மதிவாணன்
7)நாடகவியல்
8)தமிழ் விசயங்கள்
9)தமிழ் மொழியின் வரலாறு.
10)சித்திரக்கவி விளக்கம்
11)சூர்ப்ப நகை – புராண நாடகம்

🌷 *நாட்டுடமை*

இவர் எழுதிய நூல்களை 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டு இவருக்கு பெருமையை தந்தது….

🌺 *பதிப்பித்த நூல்கள்*

1)ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2) மகாலிங்கம் எழுதிய இலக்கணச் சுருக்கம் (1898)
3)புகழேந்திப் புலவரின் நளவெண்பா (1899)
4) உத்தரகோச மங்கை 5)மங்களேசுவரி
பிள்ளைத்தமிழ் (1901)
6)தனிப்பாசுரத்தொகை (1901)

🌺 *மறைவு*

தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு பாடுபட்ட
பரிதிமாற் கலைஞர் என அழைக்கப்பட்ட சூரிய நாராயண சாத்திரியார் அவர்கள் நவம்பர் ~ 02 ~ 1903 ~ ஆம் ஆண்டு மறைந்து வெறும் 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் இறவாத புகழை அடைந்தார்..

~~~~~(((()))))~~~~~

🌷தமிழ் மொழியை காப்பதற்காக தன்னுயிரையே துச்சமாக நினைத்து விட்ட தமிழறிஞர்கள் தோன்றிய மரபில்….

🌷நியூமராலஜி என்கிற மூடநம்பிக்கையை நம்பி….
தற்போதைய இளைய தலைமுறைகளின் பெயர்கள்
பெரும்பாலன பெயர்கள் வாயில் நுழையாத படியே உள்ளது….

🌷மகாத்மா காந்தி அவர்களுக்கு பல்வேறு மொழிகள் தெரிந்திருந்தாலும்
தனது சுயசரிதையான
*”சத்தியசோதனையை* அவர் தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார்….

எனவே
முடிந்த வரை நம் தாய்மொழியான
தமிழ் மொழிக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்று எனது தாழ்மையான வேண்டுகோளாகும்…

🌷 *தமிழ் மொழியின் மீது எனக்கு தீராத காதலும்,* *தணிக்க முடியாத தாகமும், கொலைவெறி பசியும்*, *என்றுமே திகட்டாத ருசியும்*,
*எல்லையில்லாத வாசிப்பும், நீண்ட தேடலும், ஆழ்ந்த பற்றும், உயர்ந்த மனப்பான்மை உண்டு*

எதையும்
வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு, மேடைதோறும் தமிழ் தமிழென்று பேசிவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமல், பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டுமென்னு நின்று விடாமல் அதை மனதார செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவன் நான்
*அதனால்தான் எனது மகளுக்கு கவின்மதி என்றும், எனது மகனுக்கு இனியவன் என்றும் பெயர் வைத்தேன்.!!!*

🌷புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
கூறியது போல
*எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு* என்று கூறி இன்றைய பயனுள்ள தகவலை நான் நிறைவு செய்கிறேன்…

*வாழ்க தமிழ் வெல்க தமிழ்*

# நன்றி #
# வணக்கம் #*முனைவர் சமூகப்பற்றாளன்ஞானசித்தன்*

7598534851

வெள்ளக்கல்பட்டி,
நாமகிரிப்பேட்டை,
நாமக்கல் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *